உடற்பயிற்சி செய்தும் எடை அதிகமாக காரணங்கள்



உடற்பயிற்சி செய்பவர்களின் விருப்பம் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். ஆனால் சிலருக்கு உடற்பயிற்சி செய்தால்
உடல் எடை கூடும். அதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்..

1. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் பசி அதிகம் எடுக்கும், உடற்பயிற்சி தான் செய்கிறோமே என்ற நினைப்பில் கணக்கு வழக்கு இல்லாமல் தின்பது. அதாவது உடற்பயிற்சியின் போது செலவாகும் ஆற்றலை (கலோரி) விட அதிக ஆற்றலை (கலோரி) உட்கொள்வது.

2. உடற்பயிற்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டி குறைவாக சாப்பிடுவார்கள். இதுவும் தவறு. இது எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும். சரியான அளவு ஆற்றல் (கலோரி) உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

3. உடற்பயிற்சி செய்வதின் பலன் முழுமையாக தெரிய சிறிது காலம் கொடுங்கள். குறைந்தது சில வாரங்கள் ஆகும். 2 முதல் 3 வாரம் கழிச்சு பாருங்க.

4. சிலருக்கு தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் எடை கூடலாம். உடல்நலக் குறைபாடுகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எடை குறைவதை தடுக்கலாம். என்ன பிரச்சனை என்பதை மருத்துவரிடம் ஆலோசியுங்கள். எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். சத்துள்ள உணவு உட்கொள்ளுங்கள்.

முடிந்த அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக்குங்க. உடற்பயிற்சியின் போதோ அல்லது அதன் பிறகோ நிறைய தண்ணீர் குடிங்க. பால் (சோயா பால் அல்ல) குடிச்சா கொழுப்பு கரைந்து தசை கூடுதுன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.

கும்முன்னு சதை புடைச்சிக்கிட்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பயிற்சிக்கு அப்புறம் பால் குடிங்க. 2 அல்லது 3 வாரம் தொடர்ச்சியா உடற்பயிற்சி செய்தா கண்டிப்பா எடை குறையத் துவங்கும்.

நன்றி மாலை மலர்
Powered by Blogger.