பித்தக்கற்கள் இருக்குதா? அப்ப இத முதல்ல படிங்க...
பித்தக்கற்கள் என்பது பித்தப்பையில் காணப்படும் சிறிய கல் போன்ற படிகமாகும். பொதுவாக இது கொழுப்பினால் உருவாகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. உணவுகளில், குறிப்பாக கொழுப்பு உணவுகளை உண்ணும் போது, பித்தப்பை பித்த நீரை, பித்த நாளங்கள் மூலம் சிறு குடல் வழியாக வெளியேற்றுகிறது. சில நேரங்களில், பித்தப்பை கற்கள் இந்த நாளங்களில் வந்து சேரும் போது, பித்தப்பையில் தாக்குதல் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.
இந்த பித்தக்கற்கள் வேகமாக எடை இழப்பதாலும், அடிக்கடி எடை அதிகரித்து, குறையும் படியான உடலிலும் அதிகம் உருவாவதற்கான் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு குறிப்பாக 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு, அதிக பித்தக்கற்கள் உருவாகிறது. கர்ப்பிணி பெண்கள் கூட பித்தக்கற்களால் பாதிக்கப்டும் அபாயம் உள்ளது. பெண்கள் மெனேபாஸ் வாய்ப்பை அதிகரிக்க, ஈஸ்ட்ரோஜன் பயன்படுத்துவதாலும், பித்த கற்களால் அவஸ்தைப்படுவது உறுதி. எனவே இந்த நேரங்களில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில் சில உணவுகள் பித்தப்பையில் உள்ள பித்தக்கற்களில் தூண்டுதலை ஏற்படுத்தி, பித்தப்பைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இப்போது பித்தக்கற்கள் இருக்கும் போது எந்த உணவுகள் சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்பனவற்றைப் பார்ப்போமா!!!
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பின்வரும் உணவுகள் பெரும்பாலான மக்களின் பித்தப்பை தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது. பித்தக்கற்கள் தாக்கும் அறிகுறி இருப்பவர்கள், உணவுப் பொருட்களான முட்டை (சிலருக்கு மென்மையாக வேக வைத்த முட்டையை சாப்பிட தடையில்லை), பன்றி இறைச்சி, வெங்காயம், கோழி, பால் மற்றும் பிற பால் பொருட்கள், காபி, திராட்சைப்பழம், ஆரஞ்சு, அவரை வகைகள் (பச்சை அவரை தவிர்த்து), கொட்டைகள், சோளம், ஆடு மற்றும் மாட்டு இறைச்சி, மதுபானம், முழுமையான கொழுப்பு உள்ள செறிவூட்டப்பட்ட உணவுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, பிற முக்கியமான தவிர்க்கக்கூடிய சிக்கல் நிறைந்த உணவுகள் பின்வருமாறு: கருப்பு தேநீர் (Black Tea), சாக்லேட், ஐஸ்கிரீம், பழச்சாறு, கார்பனேட் பானங்கள், குழாய் நீர், கோசுக்கிழங்குகளுடன், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் ஓட்ஸ், கோதுமை, பார்லி, கம்பு, செயற்கை இனிப்புப் பொருட்கள், உணவு பதப்படுத்தும் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வெண்மையாக்கப்பட்ட உணவுகளான மைதா மாவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை தவிர்பது நல்லது.
பித்தக்கற்கள் இருக்கும் போது உணவுகளை வாட்டுதல், அவித்தல் மற்றும் வேகவைத்தல் முறையில் தயார் செய்ய வேண்டும். குறிப்பாக பிரச்சினைகளை ஏற்படுத்தாத உணவுகளான பீட்ரூட், வெள்ளரிக்காய், பச்சை பீன்ஸ், ஓக்ரா, இனிப்பு உருளைக்கிழங்கு, வெண்ணெய், வினிகர், பூண்டு, பழுத்த தக்காளி, வெங்காயம், குளிர்ந்த நீர் மீன், எலுமிச்சை, திராட்சை, ஆப்பிள், பெர்ரி, பப்பாளி, பேரிக்காய், ஒமேகா-3 எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, சில பாதுகாப்பான உணவுகளும் உள்ளன. அவை ரொட்டி, தானியங்கள், பாஸ்தா, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு. இந்த உணவுகளை சமைக்கும் போது எண்ணெய் பயன்படுத்தாமல் தயார் செய்ய வேண்டும்