எந்த வயதில் என்னென்ன உடல் பரிசோதனை செய்யலாம்?

உடல் பரிசோதனை

உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன.

ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

2 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.

3 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.


18 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

18 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.

30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.
30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.

50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.

50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.
எனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:
கொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.
உங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.

அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.பல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.நமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
Powered by Blogger.