தலை அரிப்பை தடுக்க வேண்டுமா?
* அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள்.
* அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள்.
* இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும்.
* சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இருக்கிறது.
* மிளகு, ஓமம், சீரகம்.... மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு குளியுங்கள்.
* வாரம் இரு முறை இப்படி குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவுடன் ஜொலிக்கும். தலை அரிப்பையும் இது கட்டுப்படுத்தும்.
* தலைக்குக் குளித்தவுடனே சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவார்கள். அதற்கும் கை கொடுக்கிறது இந்தக் கலவை...
* அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம்.... மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* இதோடு 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
* அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இப்படி செய்துவந்தால், தலையில் கோர்த்த நீர் வடியும். உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
இப்போ சொல்லுங்க உங்க தலை அரிப்புக்கு குட் பை!