யோகா-உடற்பயிற்சி வேற்றுமை என்ன தெரியுமா?
நோய்-நொடிகள் அணுகாமல் நீண்ட நாட்கள் வாழ நமது முன்னோர்கள் காட்டிய எளியவழியே யோகாசனங்கள். ஆசனங்களை தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கசடற கற்று தேர்ந்தால், 100 சதவீதம் பலாபலன்கள் கிட்டும். நிறைய பேர் உடற்பயிற்சியையும், யோகாவையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
* உடற்பயிற்சி என்பது உடலை அசைத்து திருகி செய்யவேண்டியது. ஆனால் யோகாசனம், அப்படியல்ல.
* `நோ பெயின், நோ கெயின்' என்கிற உடற்பயிற்சி சித்தாந்தத்துக்கு நேர்மாறாக, வடிவமைக்கப்பட்டதுதான், யோகாசனங்கள். இதற்காக உடலை வருத்த வேண்டிய அவசியமில்லை.
* உடற்பயிற்சியால் உடல் மட்டுமே சீராகும். ஆனால் யோகாவில் உடல், மனம், ஆன்மா உள்ளிட்ட மூன்றுமே சீராகும்.
* உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், பியூட்டி பார்லர் எல்லாமே தற்காலிக அழகுக்காக வும், வனப்புக்காகவும் மட்டுமே பயன்படுகிறது. மனதிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லை.