கோதுமை உணவுகளை அதிகமா சாப்பிட்டா கிடைக்கும் நன்மைகள்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்:
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
உடல் எடை குறையும்:
பெரும்பாலானோருக்கு கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும். இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதய நோய்:
இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.
புற்றுநோயை தடுக்கும்:
கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.
தைராய்டு:
தற்போது நிறைய மக்கள் தைராய்டினால் அவஸ்தைப்படுகின்றனர். அத்தகையவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
எலும்பு அழற்சி:
எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் டயட்டில் கோதுமை ரொட்டி அல்லது பிரட் சேர்த்து வந்தால், அது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும்.
நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.
30 வயதிற்கு மேல் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பித்துவிடும். ஆகவே அத்தகைய பிரச்சனையில் இருந்து தள்ளி இருக்க வேண்டுமானால், தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
இரத்த சோகை:
உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், கோதுமை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வாருங்கள். இது சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை.