மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!
கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும்.
இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும். அதிலும் இத்தகைய மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அப்படி அதிசயக்க வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வைத்தியம் இயற்கையாகவே மகப்பேறு தழும்புகளை குறைத்து, தோலில் நிறமாற்றம் பெற உதவ முடியும். எனவே மகப்பேறு தழும்புகளை போக்க விரும்புபவர், கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளை முயற்சித்து பார்க்கலாம்.
எலுமிச்சையில் இயற்கையாகவே வெளுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்.
தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும்.
தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது.
ஆப்ரிகாட்டை ஊற வைத்து அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் வாரம் மூன்று முறை தடவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை சரிப்படுத்தி சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது.
ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். இது தழும்புகளை போக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும்.
மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்கும். ஆகவே தழும்புகள் உடனடியாக மறைக்கப்படும்.