வெண்மையான பளிச்சிடும் பற்களைப் பெற சில அட்டகாசமான டிப்ஸ்...



அகத்தின் அழகு முகத்தில் தெரிய, முகத்தின் அழகோ வெண்மையான பளிச்சிடும் பற்களில் தான் தெரியும். ஆனால், இவ்வாறான பளிச்சிடும் பற்களை பாதுகாத்து பராமரிப்பது எல்லோரும் நினைப்பது போல பெரிய விஷயம் கிடையாது. வெண்மையான பளிச்சிடும் பற்களை பராமரிப்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிதான செயல். அது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


உங்களுடைய பற்களுக்கு போதுமான அளவு கவனிப்பை கொடுப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியமான பற்களைப் பெறுவதுடன், அவற்றை வெண்மையாகவும், மின்னும் வகையிலும் பராமரித்திட முடியும். இதோ அவ்வாறு பற்களைப் பராமரிக்க செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவைகளைக் கொடுத்துள்ளோம். படித்துப் புன்னகை புரியுங்கள்.

சமையல் சோடா

சமையல் சோடா பயன்படுத்துவதை முடிந்த வரையிலும் தவிர்க்கவும். சமையல் சோடா பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைத் தந்தாலும், பற்களில் உள்ள எனாமலை அது நீக்கி, மஞ்சள் கறைகள் படிய வழிவகை செய்து விடுகின்றது. எனவே, சமையல் சோடாவைத் தவிர்க்க வேண்டும்.

கருப்பு நிற உணவுப் பொருட்கள்

கருமையான வண்ணங்களைக் கொண்டிருக்கும் பழங்கள் மற்றும் உணவுகளை தவிர்த்தல். சோயா சாஸ், மரினாரா சாஸ் போன்ற உணவுகளில் அதிகமான மற்றும் கருமையான வண்ணங்கள் உள்ளதால், அவை உங்களுடைய பற்களில் கறைகளை ஏற்படுத்தி விடுகின்றன.

எனர்ஜியூட்டும் பானங்கள்

சந்தைகளில் விற்கும் சக்தியூட்டும் பானங்களை குடிப்பதை அறவே தவிர்க்கவும். விளம்பரப்படுத்தப்படுவதைப் போல, அவையொன்றும் நல்ல விளைவுகளை உங்களுக்கு தரப்போவதில்லை, குறிப்பாக பற்களுக்கு. இந்த பானங்களில் கலந்துள்ள அமிலங்களின் சுரண்டும் தன்மை, பற்களின் வெண்மையை சுரண்டி விடுகின்றன.

டூத் பிரஷ்ஷை மாற்றவும்

உங்களுடைய டூத் பிரஷ்ஷை அவ்வப்போது மாற்றவும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்றுவது நல் செயலாகும். அல்லது உங்களுடைய பிரஷ் தேய்ந்து விட்டதாகத் தோன்றும் போது புதிதாக ஒன்றை வாங்க மறந்து விட வேண்டாம். அதுவும் நல்ல தரமான டூத் பிரஷ்ஷை வாங்கவும்.

சுத்தமான நாக்கு

உங்களுடைய நாக்கை சுத்தமாக வைத்திருக்கவும். நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் புத்துணர்வு மிக்க சுவாசம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், பற்களின் இயற்கையான வண்ணத்தைப் பாழ்படுத்தும் பாக்டீரியாக்களையும் சுத்தம் செய்து விடுகிறோம்.

பழங்களை சாப்பிடவும்

பற்களின் வெண்மை நிறத்தை தேக்கி நிறுத்தும் பொருட்டாக பழங்களைச் சாப்பிட்டு வரலாம். பழங்களை சாப்பிடுவதன் மூலமாக பற்களைச் சுத்தம் செய்வதுடன், அவற்றை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறோம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் வகை பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களில் எனாமல்களைச் சுரண்டும் அமிலங்கள் இருப்பதால், இந்த பழங்களைச் சாப்பிட்ட பின்னர் ஒவ்வொரு முறையும் வாயை நன்றாக கொப்புளிக்கவும்.
Powered by Blogger.