பகலில் உறக்கம் உடம்புக்கு நல்லதா?யாரெல்லாம் பகலில் உறங்கலாம்


பகல் உறக்கம் என்பது பொதுவாக நன்மையல்ல என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம் பேசுபவர், பயணம் செய்பவர்கள், அதிக தூரம் நடைப் பயணம் செய்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், அதிக உடலுறவில் ஈடுபடுபவர்கள், தலையில் பொருட்களைச் சுமந்து செல்பவர்கள், அதிக கோபம், வருத்தம், பயம் போன்றவற்றால் உடல் தளர்ந்தவர்கள், ஆஸ்துமா, விக்கல், பேதியினால் அவதிப்படுபவர்கள், வயோதிகர், குழந்தைகள், பலவீனமுள்ளவர்கள், காச நோய், தண்ணீர் தாகம், உடல் வலியால் வேதனைப்படுபவர், அஜீரணம், விபத்தில் அடிபட்டவர், எலும்புமுறிவு, புத்தி பேதலித்து பைத்தியம் பிடித்தவர், பகல் தூக்கத்தை பழக்க மாக்கிக் கொண்டவர் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் பகலில் தூங்கக் கூடாது.
அவ்வாறு தூங்குவதால் கபம் மற்றும் பித்தம் எனும் தோஷங்கள் அதிகரித்து ரத்தத்திலுள்ள கொழுப்பாகிய ட்ரைக்லிசரைட்ஸ், கெட்ட கொலஸ்ட்ரால் போன்றவை கூடி விடும் அபாயம் உள்ளது.
ஆனால் மேற்குறிப்பிட்ட நபர்கள் பகல் தூக்கத்தினால் உடலில் வாத- பித்த- கபங்களின் சம நிலையை அடைந்து ஆரோக்கியம் பெறுகிறார்கள். பகல் தூக்கத்தினால் உடலில் வளரும் கபம், உடல் போஷணைக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் அவர்களுக்குத் தருகிறது.
Powered by Blogger.