தொப்பை உருவாக காரணம் என்ன தெரியுமா?

தொப்பை


மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது.

ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் . என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது? என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது.

அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும். என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான்.

மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை, காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது. என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை.

கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது. இன்றியமையாததாகிறது.

முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும்.
Powered by Blogger.