40-ல் தோன்றும் பார்வை கோளாறுகள்


பார்வை கோளாறுகள்

நாற்பதில் தான் வாழ்க்கை தொடங்குகின்றது என்று பேச்சு வழக்கில் சொன்னாலும் நாற்பதில் தான் எல்லா நோய்களும் எட்டிப் பார்க்கத் துணிகின்றன. அதனால் தான் தன் வழக்கத்திற்கு மாறாக சட்டென எரிச்சலடையும் ஆண்களை நாற்பது வயதில் நாய் குணம் என்கிறோம். இப்படி ஏற்படும் பாதிப்புகளில் சீக்கிரமே வந்து விடும் ஒன்று தான் கண்பார்வை கோளாறுகள்.

இவ்வயதிற்கு மேல் 2 வருடத்திற்கொருமுறை ஆரோக்கியமான கண்களைக் கூட பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். * வயது கூடுவதால் ஏற்படும் கண்பார்வை தேய்மானம்

* கண்ணில் புரை

* நீரிழிவினால் ஏற்படும் கண் பாதிப்பு

* கனாகோமா. மேற்கூரிய அனைத்தும் நம் பார்வைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களே 'AMID'- 'Age related macular degenerationஎனப்படும். பார்வை தேய்மான குறைபாடு ஒருவரின் நேர் பார்வையை பாதித்து விடும்.

* ரத்தக்கொதிப்பு நோய்

* புகை பிடித்தல்

* பரம்பரை

* அதிக எடைஉடையோரை எளிதில் பாதிக்கும்.

இதன் அறிகுறிகள்

* நேர்கோடுகள் வளைந்து தெரியும்

* மங்கலான நேர் பார்வை

* தூரத்துப் பொருட்கள் தெரியாது.

* படிப்பது கடினம் போன்றவை ஆகும்.

கண்ணில் புரை என்பது :

* சில வகை மருந்துகள்

* சர்க்கரை நோய்

* கண்ணில் காயம் போன்ற பாதிப்பு

* சில பிறக்கும் குழந்தைகள் கண்ணில் புரையோட பிறக்கும் அல்லது குழந்தை வயதிலேயே தோன்றும்.

* அதிக வெயில்

* சிகரெட், மது போன்றவைகளால் ஏற்படுவது. இது தவிர வயது கூடும் பொழுதும் தோன்றும்.

புரையின் அறிகுறிகள் :

* மங்கிய பார்வை

* நிறங்கள் மங்கி தெரிவது

* அதிக வெளிச்சம் பார்க்க முடியாமை

* அடிக்கடி கண்ணாடி மாற்ற வேண்டி வருதல் ஆகும்.

கண் புரை சிகிச்சை :

இது முற்றும் பொழுது அறுவை சிகிச்சை செய்து செயற்கை மாற்று லென்ஸ் பொருத்திக் கொள்வதே மிகச் சிறந்த தீர்வு. நல்ல பலன் இருக்கும். கனாகோமா என்ற கண் பாதிப்பு கண் நரம்பினை பாதிக்கின்றது. கண் பார்வையைக் கூட இழக்கச் செய்து விடலாம்.

இது நரம்பினை பாதிக்கும் வரை அறிகுறிகள் தெரியாது. எனவே தான் அனைவருமே 2 வருடத்திற்கு கொருமுறையோ அல்லது பாதிப்புடன் இருப்பவர் வருடத்திற்கொரு முறையோ கண்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகின்றது.
Powered by Blogger.