அடர்த்தியான மீசையைப் பெற உதவும் சில வழிகள்!!!
ஆண்களுக்கு அழகே மீசை தான். அதிலும் முறுக்கு மீசை வைத்துள்ள ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டைல் ஒரு பிரபலமாக இருந்தது. மேலும் ஆண்கள் முறுக்கு மீசை வைத்தால், அவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுவார்கள். அப்படி கம்பீரமான தோற்றம் இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஏனெனில் பெண்களுக்கு நல்ல கம்பீரத்துடன் இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்.
ஆனால் தற்போதுள்ள ஆண்களுக்கு மீசை வளர்வதே கடினமாக உள்ளது. இதற்கு காரணம் ஹார்மோன் பிரச்சனைகள்,
பரம்பரை, வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் உணவுகள் தான். . பொதுவாக ஆண் ஹார்மோன்கள் குறைவாக இருந்தால் தான், மீசையின் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். ஆனால் ஒருசில செயல்களை தினமும் முயன்றால், நிச்சயம் நல்ல அடர்த்தியான மீசையைப் பெறுவதுடன், நல்ல கம்பீரமான தோற்றத்தைப் பெற்று, பெண்களை எளிதில் கவரலாம். சரி, இப்போது நல்ல அடர்த்தியான மீசையைப் பெற உதவும் சில வழிகளைப் பார்ப்போம்!!!
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் மீசையின் வளர்ச்சியானது உள்ளது. ஆகவே புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான பீன்ஸ், முட்டை மற்றும் மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
விளக்கெண்ணெய் மீசையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பொருட்களில் மிகவும் சிறந்தது. அதற்கு தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மீசை வளரும் பகுதியில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் கடுகு கீரை இவை கூட மீசையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுபவைகளே. அதற்கு நெல்லிக்காய் எண்ணெயில் கடுகு கீரையை சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை மீசை வளரும் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலந்து, அதனை மீசை வளரும் பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். பின் அவ்விடத்தில் மறக்காமல் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சாறானது வறட்சியை ஏற்படுத்தும்.
தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களானது செல்வதற்கு வழிவகுக்கும். இதனால் மீசையின் வளர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
ரோஸ்மேரி எண்ணெய், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை மீசை வளரும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையின் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
மேற்கூறியவற்றையெல்லாம் முயற்சித்தப் பின்னரும் எந்த ஒரு மாற்றமுங்ம தெரியாவிட்டால், மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை தெரிந்து, அவற்றை சரிசெய்து வந்தால், மீசையின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.