நீர்ச்சுருக்கு நீங்க வீட்டு வைத்தியம்
சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல் வலிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாது. வலியும் அதிகமாக இருக்கும். சிறுநீர் அளவில் குறைவாக வலியுடன் வெளியேறுவது நீர்ச்சுருக்கு எனப்படும்.இந்த பிரச்சனையை கீழ்கண்ட மருத்துவ குறிப்புகளை கடைபிடிப்பதன் மூலம் குணமாக்கலாம்.
மருத்துவம்
1. தண்ணீர் நன்றாகக் குடிக்க வேண்டும். தினம் 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
2. நீரைக் கொதிக்க வைத்து அதில் பொரித்த சீரகத்தைக்{1டேபிள் ஸ்பூன்} கலந்து குடிக்கலாம். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் சீரகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
3. முள்ளங்கியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி இடித்துச் சாறு பிழிந்து 50 மி.கி. சாறில் சம அளவு நீர் சேர்த்து காலை, மாலையில் உணவுக்கு முன்பு சாப்பிட சிறுநீர் நன்கு பெருகும்.
4. முள்ளங்கிச் செடியின் கொழுந்து இலை 20 கிராம் எடுத்து சோற்றுப்பு(கல் உப்பு) சிறிது சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் அடைப்பு நீங்கும்.
5. முள்ளங்கிக் கிழங்கை சமையலில் அடிக்கடி சேர்த்துச் சாப்பிட நீர்க்கடுப்புடன் மலச்சிக்கலும் நீங்கும்.
6. முள்ளங்கி விதைகளைக் கழுவி 10 கிராம் விதைகளை 200மிலி நீரில் இரவு ஊறவைத்து, அதிகாலையில் குடிக்கலாம்.
7. முள்ளங்கி விதைகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து காலை, இரவு உணவுக்குப் பின் இரண்டு கிராம் பொடியை நீர் அல்லது வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிறு நீர் பெருகும்.
8.பழுத்த மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக மென்று தின்ன வேண்டும். மாதுளம் பழத்தின் விதையை கீழே துப்பி விட கூடாது விதைகளை நன்றாக மென்று மாவாகச் செய்து விழுங்க வேண்டும். மாதுளம் பழவிதைகளை மெல்ல மெல்ல அது பாதாம் பருப்பின் சுவை வரும் அதான் இதை சுலமாக நாம் சாப்பிடலாம். இது போலவே தொடர்ந்து காலை,மாலை என முன்று நாள் சாப்பிட்டால் நீர் கடுப்பு குணமாகிவிடும் தினமும் சாப்பிட வேண்டும் அப்போதுதான் சரியாகும்.