காது மூக்கு சம்பந்தமான சில மருத்துவகுறிப்புகள்



தினமும் காதுகளில் சோப்பு போட்டு சுத்தம் செய்யவேண்டும்.  வயதானவர்களுக்கு காதுகளை சரிவர சுத்தம் செய்ய கொள்ள முடியாமல் போகலாம்.
இதனால், காது ஓரம் அழுக்கு அடைபோல் படிந்துவிடும். எடுப்பது மிகவும் கடினம். ஒரு காட்டன் பஞ்சில் எண்ணெய், தோய்த்து, காது வெளிப்புற இடுக்குகளில் ஒற்றி எடுத்து, மிதமான வெந்நீரில் சுத்தம் செய்தால், அழுக்கு மறைந்து காது பளிச்சென மின்னும்.


 சிலரது காதின் தோல் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும்.  இவர்கள் தினமும்  மாய்ச்சரைசர் க்ரீம் தடவி வரலாம்.  பஞ்சு போல் காது மெல்லியதாகும்.


காதில் சிலருக்கு ஆங்காங்கே முடி இருக்கும். இதுவும் நல்லதுதான். தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.


 காது திடீரெனக் கேட்கவில்லை எனில், 24 மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது கேட்புத் திறனையே பாதித்துவிடும்.
 
 காது கேட்கவில்லை என்பதற்காக கடைகளில் விற்கும் ஹியரிங் எய்டை நாமே வாங்கி பயன்படுத்துவது கூடாது.  மருத்துவரிடம் காட்டி, செவித்திறன் குறைவு அளவை அறிந்த பிறகே அதற்கேற்ற ஹியரிங் எய்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.


 மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.


 அதிக எண்ணெய் சருமம் மற்றும் மூக்கின் மேல் அழுக்குப் படியும்போது பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் வரும்.  இதற்கு நல்ல தீர்வு ஆவி பிடிப்பதுதான்.  கொதிக்கும் வெந்நீரில் வெட்டிவேரைப் போட்டு நன்றாக ஆவிப் பிடிப்பதன் மூலம் மூக்கு சரும துளை பெரிதாகும்.  ஒரு காட்டன் பஞ்சினால் துடைத்து எடுக்கலாம்.


 பெரியவர்கள் மூக்கு சளிக்காகப் பயன்படுத்தும் துண்டை குழந்தைகள் தொடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.  குழந்தைகளுக்கு சட்டென கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
   
 சிலர், இருமல் வந்தால் உடனடியாக கடையில் இருமல் மருந்தைக் கேட்டு வாங்கி அளவுத் தெரியாமல் குடிப்பார்கள். குழந்தை இருமும் போதும் ஒரு ஸ்பூன் கொடுப்பார்கள். இது பெரும் ஆபத்து. இருமல் மருந்து எதுவானாலும், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வாங்கக் கூடாது.
Powered by Blogger.