கண்பார்வைக் கோளாறு ஏற்பட காரணங்கள்
இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.
மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.
இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.
ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம்.
அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி... என பட்டியல் நீளும்.
கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்:
1· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.
2· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.
3· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
4·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
5·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.
6· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே... இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.
7· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.
8·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.
9· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
10· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.