தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்



தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்

ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர் அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது சிறிதாக மாறிவிடும். நினைவாற்றல் கூடும்.



சோர்வு அகல வேண்டுமா ?

சில சமயம் காரணம் தெரியாமலேயே உடல் சோர்வாக இருக்கும். அப்பொழுது வெது வெதுப்பான நீரில் தேனை இரண்டு தேக்கரண்டி விட்டு உட்கொண்டால் உடல் சோர்வு உடனே அகன்று விடும்.

பசி அதிகரிக்க செய்ய

வயிறு மந்தமாக இருந்து பசி உணர்ச்சி ஏற்படாமல் இருந்தால் வில்வப் பழங்களை சேகரித்து அரைத்து தேன் கலந்து பசுவின் பாலோடு சேர்த்து சாப்பிட வேண்டும். மூன்று வேளை சாப்பிட நல்ல பசியெடுக்கும்.

இரத்த சுத்தி ஏற்பட

காய்ந்த வில்வமரப் பூக்களை தூளாக்கி கொள்ள வேண்டும். அந்த தூளில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குலைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.

கபம் நீங்க

கருந்துளசி இலைகளை பிழிந்தெடுத்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து சம அளவு தேன் கலந்து உட்கொள்ள கபத் தொல்லை நீங்கும்.

குழந்தைகளின் மார்புச் சளி

கருந்துளசி இலைகளை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் பத்து முதல் பன்னிரண்டு துளிகள் எடுத்து இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து ஐந்து சொட்டு தேன்விட்டுக் கலக்கி இரண்டு முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கொடுக்க மார்புச் சளி இளகி வெளியேறும். இருமல் நீங்கும்.

இருதய பலம் ஏற்பட

கருந்துளசியை இடித்துச் சாறெடுத்து நூறு மில்லி பசுவின் பாலில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து, அதே அளவு தேன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இருதயத்தின் செயற்பாடு சிறப்பாக அமையும்.

மூளை சுறுசுறுப்பாக செயல் பட

கருந்துளசி இலைச்சாறு கிராம் கற்கண்டு தூள் கிராம் இரண்டையும் சேர்த்து பதமாக காய்ச்சி கிராம் தேன் சேர்த்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தை காலையிலும் மாலையிலும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி எடுத்து பசுவின் பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வர மூளை சுறுசுறுப்புடன் செயல்படும்.

Powered by Blogger.