மாத்திரைகளை உடைத்து உண்ணலாமா?
மாத்திரைகளை உடைத்து உண்ணலாமா?
ஜேர்மனியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பரிகாரம் கொடுக்கப்படும் மருந்துகளில் சுமார் 25% உடைத்தே பாவிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.
ஏன் உடைக்கிறார்கள்.
பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கிறார்கள்.
பெரும்பாலான குழந்தைகளும் சில பெரியவர்களும் மாத்திரை பெரிதாக இருப்பதாக எண்ணி அதை உடைத்தால் சுலபமாக விழுங்க முடியும் என்பதற்காக உடைத்து உட்கொள்கிறார்கள்.
சில மாத்திரைகள் நோயாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதனால் உடைத்து விழுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உதாரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் HCT என்ற மாத்திரை 50 mg அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால் இலங்கையில் பெரும்பாலும் 25 mg அளவே நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் உட்பட எவருமே 50 mg மாத்திரையை இறக்குமதி செய்வதில்லை. இதனால் எல்லா நோயாளிகளும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அதே போல கொலஸ்டரோலுகக்கு உபயோகிக்கும் Atrovastatin மாத்திரை 10 அல்லது 20 mg அளவிலேயே கிடைக்கிறது. 5 அல்லது 15 mg உபயோகிக்க வேண்டிய அனைவரும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரக் காரணங்களுக்காகவும் பலர் உடைத்து உட்கொள்கிறார்கள். ஒருவருக்கு 20 mg Atrovastatin தேவையெனில் அதை 5mg மாத்திரையாக வாங்கும் செலவை விட 10 mg மாத்திரையை பாதியாக உடைக்கும்போது குறைவாகவே இருக்கும். இக் காரணத்திற்காகவும் பலர் மாத்திரையை உடைத்து உபயோகிக்கிறார்கள்.
பாதிப்புகள் என்ன?
ஆனால் மாத்திரைகளை உடைக்கும்போது
அவை சரிபாதியாக உடைபடுவதில்லை.
அத்துடன் உடைக்கும் போது துகள்களாக சற்று உதிரவும் செய்கின்றன.
உடைக்கவே கூடாத மருந்துகளும் உள்ளன. Slow release, Extended release போன்றவை படிப்படியாக அல்லது நீண்ட நேரம் எடுத்து உணவுக் கால்வாயில் கரைவதற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டவை. இவற்றை உடைத்தால் அதன் நோக்கமே சிதறிவிடும்.