மூக்கடைப்பு தீர எளிய வழிகள்

மூக்கு அடைப்பு



மூக்கு அடைப்பை விரட்ட முத்தான ஆலோசனைகள் !!

பொதுவாக மழைக்காலங்களில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.



மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழ் போல்டு ஸ்கை மூக்கடைப்புக்கான ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து, மூக்கடைப்பில் இருந்து விடுபடுங்கள்.

ஆவி பிடித்தல்

மூக்கடைப்பின் போது, ஆவிப் பிடித்தால், உடனே மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். மேலும் மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் குணமாகிவிடும். அதிலும் அரை வாளி சூடான நீரில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, ஆவி பிடித்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

சூடான டீ

மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபட வேண்டுமெனில், சூடான ஒரு கப் டீ குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான ஏதேனும் நீர்மத்தை குடித்தால், அது மூக்கில் அடைப்பை ஏற்படுத்திருக்கும் பொருளை தளரச் செய்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஆனால் நல்ல சூடான இஞ்சி டீயைக் குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால், மூக்கில் உள்ள அடைப்புகளுடன், அங்குள்ள புண்களும் குணமாகிவிடும்.

சூடு நீர் குளியல்

மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீர் குளியலை மேற்கொண்டால், உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும்.

காரமான உணவுகள் நல்ல காரமான உணவுகளை சாப்பிட்டால், உடலில் வெப்பமானது அதிகரித்து, சளியானது தளர்ந்து வெளியேற்றப்படும். இதனால் மூக்கடைப்பும் நீங்கும்.

தண்ணீர் மற்றும் உப்பு

இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.

வெங்காயம்

மற்றொரு சிறந்த மூக்கடைப்பு நிவாரணி என்றால், அது வெங்காயத்தின் மூலம் தான். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும். இல்லையென்றால், வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும், மூக்கடைப்பு போய்விடும்.

சூடான தக்காளி சூப்

1 கப் தக்காளி சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, நன்கு சூடேற்றி, ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பாக குடித்தால், மூக்கடைப்பு அகலும்.
Powered by Blogger.