முகத்திலுள்ள சுருக்கத்தை போக்குவதற்கான வழிகள்..
முகச் சுருக்கம் என்பது அனைவருக்கும் இயல்பு தான் என்றாலும் அதை மனதால் ஏற்று கொள்ள முடியாது. அனைவருக்கும் அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.
வயதாக ஆக தோல் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் நம் வயது மேலும் கூடியது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இதற்காக கவலைப்படுவது எல்லோரும் செய்வதே. அது தேவையற்ற கவலை. முகச் சுருக்கத்திற்காக கவலைப்படுவதை விடுத்து என்ன செய்வது என்று கவனிக்க வேண்டும்.
அக்காலத்தில் பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது முகச் சுருக்கத்தை போக்குவதற்கென்று பல அழகு நிலையங்கள் வந்து விட்டன. அவைகள் அழகை மேம்படுத்தோடு இளமை அழகுடன் ஜொலிக்கவும் உதவுகின்றன. மஞ்சள், வேப்பிலை, கடலை மாவு போன்ற இயற்கை பொருட்களைப் பூசி அழகைப் பாதுகாத்து கொண்டிருந்த நம் மக்கள் மத்தியில் பல அழகு சாதனப் பொருட்கள் வந்துள்ளதால் மகிழ்ச்சி தான்.
அழகு கலையில் தேர்ந்தவர்கள் பலவித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அழகை மேம்படுத்துவதற்காக பல அழகு சாதனப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர். அவை பல வகைகளில் அழகை பாதுகாக்க உதவுகின்றன. இவை தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. அதைப் பற்றி இங்கு காண்போம்.
போடாக்ஸ்
இதை செய்வதால் 7 முதல் 14 நாட்களுக்குள் நல்ல பலனை அடைய முடியும். மேலும் இதன் மூலம் அழகை மிருதுவாக்க முடியும். இது நான்கு மாதங்கள் வரை அழகை பாதுகாக்க உதவும். இதனால் பிரச்சனை வராமல் இருக்க மருத்துவர் உதவியுடன் இந்த சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். இதை செய்வதால் முகத்தின் இறந்த செல்களை போக்கி பொலிவை கொண்டு வர முடியும்.
கெமிக்கல் பீல்
முகத்தின் பொலிவை கூட்டுவதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணுதலை கெமிக்கல் பீல் என்கின்றனர். இதற்கு கெமிக்கல் திரவத்தைக் கொண்டு மெல்லிய மசாஜ் செய்து முகத்தின் இறந்த செல்களை நீக்க முடியும். இதன் மூலம் முகத்திற்கு புதிய பொலிவை கொடுக்க முடியும்.
டெர்மாபிரேசியன்
இந்த முறையில் மின்சார கருவியைக் கொண்டு முகத்தின் இறந்த செல்களை நீக்குகின்றனர். இதனால் தோல் மிருதுவாகவும் பொலிவாக ஜொளிக்கும். முகத்தில் அதிகம் சுருக்கம் உள்ளவர்களுக்கு இந்த முறை ஏற்றது அல்ல. இந்த முறையால் முகத்திற்கு நிரந்தர நிறத்தையும் பொலிவையும் கொடுக்க முடியும்.
ரேசர் ரீசர்ஃபேசிங்
இந்த முறை தற்பொழுது தான் அறிமுகம் ஆகி உள்ளது. முகச் சுருக்கங்களை நீக்குவதர்காக செய்யப்படும் பேஷியல் முறை இது. கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்ட லேசர் முறை சிகிச்சையால் பாதிப்படைந்த தோலுக்கு புது பொலிவை கொடுக்க முடியும். இதன் மூலம் தோலுக்கு கூடுதல் நிறத்தையும் கொடுக்க முடியும். இதை பேலர் பீல் அல்லது லேசர் வேப்பரைசேஷன் என்றும் கூற முடியும்.
முகச் சுருக்கத்திற்கான மருத்துவ சிகிச்சை
ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட்: இவற்றை பாலில் இருந்தும் பழத்தின் சர்க்கரையில் இருந்தும் எடுக்கின்றனர். இவற்றை பல சருமம் சார்ந்த க்ரீம்களில் காண முடியும். இதில் லாக்டிக் ஆசிட் உள்ளதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை பூசிய உடனேயே சருமத்தின் உள் நன்றாக ஊடுருவி முகத்தின் இறந்த செல்லை நீக்கி மென்மை அடைய செய்கின்றது. வைட்டமின் ஏ ஆசிட்: முக க்ரீம்களில் வைட்டமின் ஏ ஆசிட் தன்மை இருந்தால், முகச் சுருக்கங்களை போக்க பயன்படுத்த முடியும். முதலில் அதை தடவி பார்க்கவும். அப்பொழுது சிவப்பு நிற புள்ளிகள் தோன்றலாம். ஆகவே தோல் மருத்துவரின் உதவியுடன் இதை செய்தால் நல்லது.
ஆலிவ் ஆயில் ஃபேஸ் பேக்
தேன், க்ரீம், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டால் சுருக்கம் நீங்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறை முகத்தில் பூசினால் பொலிவு கிடைக்கும்.
மஞ்சள் மற்றும் கரும்புச் சாறு
மஞ்சளுடன் கரும்புச் சாற்றினை சேர்த்து பூசினால் முகம் பொலிவடையும்.
அதிகம் கழுவ வேண்டாம்
முகத்தை அதிக முறை கழுவ வேண்டாம். இதனால் முகத்தில் இருக்கும் இயல்பான ஈரத்தன்மை அழியக்கூடும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் வேண்டாம். இதனால் இரத்தம் மாசு அடைந்து அழகை கெடுக்கும்.
ஆரோக்கியமான உணவு
எப்போதும் நல்ல ஆரோக்கியாமான உணவை சாப்பிடவும்
மாய்ஸ்சுரைசர்
முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் க்ரீம் தடவி ஈரப்பதத்தை பாதுகாக்கவும்.