சர்க்கரை நோயாளிகள் மைதா உணவுகளை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள்


சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்?

மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.



சர்க்கரை நோயாளிகள் எந்த வகை பழங்களை சாப்பிடலாம்?

ஆப்பிள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, தர்ப்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். அதேசமயம் பழச்சாறு குடித்தால், அது உடனே உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால், தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை, முந்திரி வகைகளை (நட்ஸ்) பயன்படுத்தலாமா?

செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம், சாப்பிட்ட உடனேயே அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை (30-50 சதவீதம்), அவை குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள ஆர்ஜினின், இருதயத்திற்கு ஊறு விளைவிக்கும் சி.ஆர்.பி., அளவை குறைக்கிறது. எனவே, அவற்றை பயன்படுத்தலாம். வாரத்தில் 3 நாட்கள், ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் பருப்பு பயன்படுத்தலாம்.

காபி, டீ- இவற்றில் எது சிறந்தது?

காபி சிறந்தது. டீ விரும்புவோர் எலுமிச்சை டீ அல்லது கிரீன் டி குடிக்கலாம். காலையில் ஒரு கப் காபி, மாலையில் ஒரு கப் டீ, பால் அளவை குறைத்து, எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இவை மாரடைப்பு வருவதை தவிர்க்கிறது.

"ஓட்ஸ்’ சாப்பிடுவது எந்தளவு பலனை தரும்?

"ஓட்ஸ்’ என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். இவை விரைவில் செரிமானம் ஆகிவிடுவதால் சீக்கிரமே பசியெடுக்கும். எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். ஆனால், "ஓட்ஸை’ சிறிது கெட்டியாக செய்து காலை உணவாக சாப்பிடலாம்.
Powered by Blogger.