கேக் செய்வது எப்படி?





மைதா கேக்



தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1/2 கிலோ
வெண்ணெய் - 50 கிராம்

சர்க்கரை - 350 கிராம்
சமையல் சோடா உப்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

1. சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

3. அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, சமையல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.

4. அந்த கலவையில் தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் கட்டியில்லாமல் பிசையவும்.

5. பின்பு மாவை சற்று மொத்தமாக தேய்த்து தேவையான வடிவில் (டைமண்ட், வட்டம், சதுரம்) வெட்டிக் கொள்ளவும்.

6. வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், வெட்டிய மைதா மாவு துண்டுகளைப் போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்பு

1. அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.


111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111


சாக்லேட் கேக்



தேவையான பொருட்கள்

வெண்ணெய்- 150 கிராம்
சீனி- 200 கிராம்
மைதா- 250 கிராம்
முட்டை- 3
பேக்கிங் பெளடர்- 1 மேசைக்கரண்டி
கொதி நீர்- அரை கப்
கோக்கோ பவுடர்- 2 மேசைக்கரண்டி


செய்முறை


கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.
மைதாவையும் பேக்கிங் பெளடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.
மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.

மைதா கலவையையும் கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும்.

160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஆறியதும் துண்டுகள் செய்யவும்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

ஸ்பாஞ்ச் கேக்




தேவையான பொருட்கள்

பொடித்த சீனி- 250 கிராம்
வெண்ணெய்- 250 கிராம்
முட்டை-4
மைதா மாவு- 250 கிராம்
பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன்


செய்முறை


வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room temperatureல் வைக்கவும். அது மிருதுவான பதத்துக்கு வரும்போதுதான் கேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

சீனியை நன்கு மாவாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

மாவையும் பேக்கிங் பவுடரையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.

முட்டைகளை தனியாகப் பிரித்தெடுக்கவும். முதலில் முட்டை வெள்ளைகளை சிறிதுகூட மஞ்சள் கரு கலப்பில்லாது எடுத்து வைக்கவும்.
பிறகு அவற்றை egg beater அல்லது electronic beaterல் நன்கு அடிக்கவும்.

அடிக்க அடிக்க முட்டை வெள்ளை கட்டித் தயிர்போல திரண்டு வரும். இறுதியில் கட்டியான பாளம்போல தயிர் பதத்தில் வந்ததும் அடிப்பதை நிறுத்தவும்.

ஒரு அகன்ற க்ளாஸ் பாத்திரம் எடுத்து இளகலான வெண்ணெய், சீனியைப் போட்டு நன்கு அடிக்கவும். அல்லது electronic beaterலும் இதை மட்டும் நன்கு நுரை வர அடிக்கவும்.

பிறகு முட்டை வெள்ளையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஒரு ஸ்பாட்டுலாவால் மிருதுவாக கலக்கவும். பின் அடித்த மஞ்சள் முட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கவும்.

அதன் பிறகு மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
இறுதியில் எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி பரப்பவும்.
ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 160 டிகிரி C-யில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆற வைத்து விரும்பிய வண்னம் துண்டுகள் செய்யவும்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

சீஸ் கேக்




தேவையான பொருட்கள்

பிஸ்கட் தூள் (graham crackers) - ஒன்றரைக் கோப்பை
சர்க்கரை - கால் கோப்பை
உருக்கிய வெண்ணெய் - கால் கோப்பை
க்ரீம் சீஸ் - 8 அவுன்ஸுள்ள இரண்டு பாக்கெட்
புளித்த கிரீம்(sour cream) - அரைக்கோப்பை
முட்டை - இரண்டு
சர்க்கரை - ஒரு கோப்பை
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
துருவிய எலுமிச்சை தோல் - ஒரு பழம்
வென்னிலா எசன்ஸ் - அரைதேக்கரண்டி
புளூ பெர்ரி - ஒன்றரைக்கோப்பை
சர்க்கரை - அரைக்கோப்பை
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - இரண்டு மேசைக்கரண்டி


செய்முறை


ஒரு கோப்பையில் பிஸ்கட் தூளுடன் சர்க்கரை போட்டு உருக்கிய சூடான வெண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும். அல்லது மிக்ஸரில் பிஸ்கட்டுகளைப் போட்டு தூளாக்கி அதனுடன் சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
இதனை சீஸ் கேக் செய்வதெற்கென்றே உள்ள மீடியமான அளவுள்ள பேனில் கொட்டி சமமாக பரவலாக தட்டவும்.

பிறகு இதை 350 டிகிரி சூடாக்கிய அவனில் வைத்து பேக் செய்யவும்.
ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் நல்ல பிரவுன் கலரில் ஆனவுடன் வெளியில் எடுத்து விடவும்.

பிறகு பிஸ்கட் தூளாக்கிய மிக்ஸரில் முதலில் க்ரீம் சீஸையும், சவர் க்ரீமையும் சேர்த்து போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு சர்க்கரை, சோளமாவு, துருவிய எலுமிச்சை தோல், முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.
பிறகு இந்த கலவையை தயாராகியுள்ள கிரஸ்ட்டில் பரவலாக ஊற்றி ஒரு கரண்டியின் உதவியால் சமப்படுத்தவும்.

பிறகு அவனை 300 டிகிரி Fல் சூடாக்கி அதில் வைத்து ஒரு மணி நேரம் வரை பேக் செய்யவும். அல்லது க்ரீம் கலவை நன்கு கெட்டியாகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் பழங்களுடன் சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு கெட்டியான சிரப்பாகும் வரை மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி விடவும்.

நன்கு குளிர்ந்து செட்டிலான கேக்கை பரிமாறும் தட்டில் வைத்து துண்டுகள் போட்டு பழச்சிரப்பை மேலாக ஊற்றி பரிமாறவும்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

மெர்ரி கேக்



தேவையான பொருட்கள்

மைதா - 250 கிராம்
ஐசிங் சுகர் - 250 கிராம்
பட்டர் - 250 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - சிறிது
முட்டை - 5
கிஸ்மிஸ் - 50 கிராம்
செர்ரி பழம் - 50 கிராம்
ஆரங்சு பழத்தோல் - 5 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்


செய்முறை


முதலில் மைதா,பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்துவைக்கவும்.
முட்டைகளை அடித்து வெள்ளைகரு,மஞ்சள்கரு ஆகியவற்றை தனித்தனியாக எடுத்துவைக்கவும்.

பட்டர், ஐசிங் சுகர், முட்டையின் மஞ்சள்கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.

கிஸ்மிஸ், செர்ரி பழம்.ஆரஞ்சு பழ தோல் ,முந்திரி இவற்றை சிறிதாக நறுக்கிவைக்கவும்.

சீனிக்கலவையில் சிறிது சிறிதாக மாவையும்,வெள்ளைக்கருவையும் சேர்த்து நன்கு கலக்கி கொண்டே இருக்கவும்.

பின் நறுக்கிய முந்திரி,கிஸ்மிஸ்,ஆரஞ்சு பழ தோல், செர்ரி இவற்றை கலக்கவும்.

கேக் ட்ரேயில் சிறிது பட்டர் தேய்த்து இந்த கலவையை ஊற்றி ஓவனில் மீடியம் ஹீட்டில் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
தேங்காய் கேக்



தேவையான பொருட்கள்

நன்றாக முற்றிய பெரிய தேங்காய் - 2
ரவை - அரை கிலோ
ஏலக்காய் - 5
சீனி - ஒரு கிலோ



செய்முறை


தேங்காயை நன்றாக துருவிக் கொள்ளவும். ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயையும் நன்றாக வதக்கவும். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் இடித்துக் கொள்ளவும்.
அத்துடன் ஏலக்காயை பொடியாக்கி கலவையில் கலக்கவும்.
சீனியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்சவும்.
பாகு பதமாக வந்தவுடன் கலவையை தூவி நன்றாக கிளறவும். அகலமான தட்டில் பரப்பி கேக் துண்டுகளாக வெட்டவும்.


Powered by Blogger.