தவறான கூந்தல் பராமரிப்பு வழுக்கையை ஏற்படுத்திவிடும்



சிகை அல்லது கூந்தல் அலங்காரம் என்பது ஒவ்வொருவரும் தினமும் மேற்கொள்ளும் இன்றிமையாத கடமைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன் வரை, முடியை பற்றி அக்கறை எடுத்து கொள்கிறோம். ஆனால் சமீப காலமாக கூந்தல உதிர்தல் என்பது பரவலாக அறியப்பட்டு வருகிறது.



ஒரு புதிய ஆய்வின் படி, கூந்தல் அலங்காரம் மற்றும் அலங்காரம் செய்ய பயன்படுத்தும் கருவிகள் போன்றவை கூந்தலுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. இந்த சேதமானது கூந்தல் உடைதல், மந்தமான, உறுதியற்ற, திறனற்ற தன்மையை ஏற்படுத்தும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், முடி வல்லுநர்களின் ஆலோசனை குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் கூந்தல் பாதிப்பை தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் கூந்தலை குறைந்த பட்சம் நூறு முறை சீவுகிறீர்கள் என்றால், அது கூந்தலின் முனைகளில் பிளவு ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே சிகை அலங்காரம் செய்த பின் கூந்தலை எப்படி பராமரிப்பது என்று அறிந்து கொண்டால், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
கூந்தல் சேதம் மற்றும் கூந்தல் உதர்தலைத் தடுக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் சில எளிய முறையை பின்பற்றினால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

டவல்

தலைக்கு குளித்தப் பின்னர் ஒரு டவல் மூலம் கூந்தலை சுற்றி காய வைக்கலாம் அல்லது முடியை காற்றில் உலரவிடலாம்.


ஈரமான கூந்தலை சீவ வேண்டாம்

பெரும்பாலான மக்கள் அவசரம் காரணமாக, ஈரமான கூந்தலை சீப்பு அல்லது பிரஷ் கொண்டு சீவும் போது, அது எளிதில் உடைந்துவிடும். சுருட்டை முடி அல்லது அடர்த்தியான முடி உள்ளவர்கள், ஈரமான கூந்தலை நன்கு உலர வைத்து பின் சீப்பை போட வேண்டும்.

அதிகமாக சீவ வேண்டாம்


முடியை குறைந்த அளவே சீவ வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேல் சீவும் போது, கூந்தலில் பிளவு ஏற்படுகிறது.


ஹேர் ஜெல்

நீண்ட காலத்திற்கு, முடிக்கு பயன்படுத்தும் ஜெல் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பயன்படுத்திய பிறகு, சீப்பை பயன்படுத்தினால் கூந்தல் உடையவும், காலப்போக்கில் அது அதிகமான கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தி, வழுக்கைக்கு வழிவகுக்கலாம்.

நன்கு உலர விட வேண்டும்

கூந்தலை அலங்காரம் செய்வதற்கு முன்போ அல்லது சீவுவதற்கு முன்போ, கூந்தலை இயற்கை காற்றில் உலர விட வேண்டும். மேலும் எத்தனை முறை வாரத்திற்கு கூந்தலை ஹேர் டிரையர் மூலம் உலர்த்துவதில் இருந்து குறைக்கிறோமோ, அது கூந்தலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும்.

கூந்தல் அலங்கார கருவிகள்

மீடியம் அல்லது குறைந்த செட்டிங்கில் வைத்து ப்ளாட் அயர்னை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஒருவேளை கர்லிங்க் அயர்னை உபயோகப்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று வினாடிகளுக்கு மேல் ஒரு இடத்தில் வைக்க கூடாது. முடி எந்த அமைப்பில் இருந்தாலும் சரி, அதிகப்படியான வெப்பம் கூந்தலுக்கு ஒத்து வராது. அது கூந்தலை சேதப்படுத்தி விடும்.

ஹேர் ஸ்டைல்

ஜடை பின்னுதல், குதிரை முடி வைத்தல், இரட்டை ஜடை மற்றும் ப்ரீ ஹேர் போன்றவற்றை தொடர்ந்து வைக்க வேண்டாம். இந்த வகையான அலங்காரங்கள், கூந்தலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் காரணமாக கூந்தலானது பிளவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அழுத்தமானது தொடர்ந்தால், அது நிரந்தர கூந்தல் உதிர்வுக்கு காரணமாகிவிடும்.

Powered by Blogger.